1946 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் அர்த்தநாரி கவுண்டன் வலசில், சின்னப்ப கவுண்டர், நல்லம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் A.C. முத்துசாமி. இளங்கலை பொருளியல் முடித்து 1971 ஆம் ஆண்டு சென்னையில் சட்டப் படிப்பு முடித்தார். ஐம்பது ஆண்டுகள் பணி அனுபவம் உடையவர், இவரின் மகன் கோவையில் மருத்துவர், தற்போது மனைவியுடன் ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். பயண ஆர்வமும் புத்தக வாசிப்பும் உண்டு, எப்போதும் இளைஞர்களுடன் காணப்படுவார். ஆங்கிலப் புலமை மிக்கவர். ஈரோட்டில் அவரது அலுவலகத்தில் சந்தித்து செய்த நேர்காணல் இது. .. A.s. Krishnan, advocate, Erode. 1. இந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபாவத்தின் வாயிலாக ஒரு வெற்றிகரமான வழக்கறிஞரின் குணாம்சம் என எதை நினைக்கிறீர்கள் ? அவர் சட்ட அறிவு, அவர் வாதிடும் திறன், அவர் நேர்மை ? முதலில் நேர்மை, அவர் அற்பணிப்புடன் இருக்க வேண்டும், பொருளியல் ரீதியாக வெற்றிகரமாக ஒரு அலுவலகத்தை நடத்த வேண்டும், அவருக்கு தொடர்புறு திறனும் வேண்டும். 2. முதல் 3 ஆண்டுகள் உங்கள் தொழில்முறை இவ்வாறு இருந்தது, ...